சீமான் ஓர் மனநோயாளி - விமர்சிக்கும் தமிழன் பிரசன்னா.!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு மனநோயாளி என மிக காட்டமாக விமர்சித்துள்ளார் திமுகவின் செய்தி தொடர்பு இணைச்செயலாளர் வழக்கறிஞர் பிரசன்னா.
திமுகவின் தலைவர் கலைஞரின் 95 வது பிறந்த நாள் விழா சென்னை சிந்தாதரிப்பேட்டையில் நடைபெற்றது. இதில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தமிழன் பிரசன்னா, " தற்போது தமிழகத்தில் மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. எந்த வித கொள்கை புரிதல் ஏதுமின்றி தாங்கள் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என கூறித்திரிகின்றனர் சீமான், ரஜினி, கமல் போன்றவர்கள்" என மிக காட்டமாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக, திராவிட கட்சிகள் தான் தமிழகத்தினை சீரழித்துவிட்டன என்ற ரீதியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திமுகவை விமர்சித்துவருவது குறிப்பிடத்தக்கது.