SuperTopAds

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - வேதாந்தா குழுமம் மனுத்தாக்கல்.!

ஆசிரியர் - Editor II
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - வேதாந்தா குழுமம் மனுத்தாக்கல்.!

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலை தங்கள் வாழ்வாதாரத்தினை சீர்குலைக்கிறது என அப்பகுதி மக்கள் அற வழியில் தொடர்ச்சியாக போராடி வந்த நிலையில், கடந்த மே மாத இறுதியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பேரணியில் சமூக விரோதிகள் புகுந்ததாகக்கூறி சுமார் 13 அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்றது தமிழக காவல்துறை.

அப்பாவி பொதுமக்களை அரசே சுட்டுக்கொள்வதா என்ற கண்டன குரல்கள் அரசுக்கு எதிராக மூர்க்கமாக எழுந்த நிலையில், ஆலையை மூடி சீல் வைத்துள்ளது தமிழக அரசு.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா குழுமம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.