SuperTopAds

கோச்சடையான் மோசடி: ரஜினி மனைவிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ஆசிரியர் - Editor II
கோச்சடையான் மோசடி: ரஜினி மனைவிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

 கோச்சடையான் திரைப்படத்திற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் செய்த ஒப்பந்தத்திற்கு உரிய தொகையை வழங்காத நடிகர் ரஜினிகாந்த்மனைவியை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோச்சடையான். ரஜினியின் மகன் சௌந்தர்யா இயக்கிய அனிமேஷன் படமான இது 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தலைமை வகிக்கும் மீடியா ஒன் (Media One) நிறுவனம் இப்படத்தைத் தயாரித்தது. 

இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிக்காக ஏடி பிரோ என்ற தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றில் ரூ.10 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், அதில் ரூ.6.5 கோடி நிலுவைத் தொகையை செலுத்தவில்லை. 

இதனால், அந்த நிறுவனத்தின் சார்பில் மீடியா ஒன் நிறுவடத்தின் தலைவரான லதா ரஜினிகாந்த் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தனது மனுவில் நிலுவைத் தொகையைத் தராததுடன் படத்தன் உரிமையை தங்களை ஆலோசிக்காமல் எரோஸ் இன்டர்நாஷனல் நிறுவனத்திடம் விற்றுவிட்டதாகவும் குற்றம்சாட்டியது.

இந்த வழக்கை கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், தனியார் நிறுவனத்திற்குத் தர வேண்டிய ரூ.6.5 கோடி நிலுவைத் தொகையை 12 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று லதா ரஜினிகாந்த்க்கு உத்தரவிட்டது. ஆனால், லதா ரஜினிகாந்த் இன்னும் அந்தத் தொகை செலுத்தவில்லை. 

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், கொடுக்கப்பட்ட அவகாசத்திற்குள் பணத்தை செலுத்தாத லதா ரஜினிகாந்த்தை கடுமையாக கண்டித்துள்ளது. அந்த நிறுவனத்தின் உதவியைப் பெற்றுவிட்டு, பணத்தைக் கொடுப்பதற்கு என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.