யாழ்.கொக்குவில் கிழக்கில் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் இருவர் கைது!

யாழ்.கொக்குவில் கிழக்கு பகுதியில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
50 கிராம் கஞ்சா கலந்த மாவாவை உடைமையில் வைத்திருந்தார்கள் என்ற அடிப்படையிலேயே இருவரும்
நேற்று(18) இரவு கைது செய்யப்பட்டனர்.
யாழ்.மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேக நபர்களை யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.