யாழ்.தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது, ஹயஸ் வாகனம் புதுக்குடியிருப்பில் மீட்பு...

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது, ஹயஸ் வாகனம் புதுக்குடியிருப்பில் மீட்பு...

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அருகில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் பயணித்த ஹயஸ் வாகனமும் புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை(04) மாலை 5.30 மணியளவில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத குழு மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து வன்முறை கும்பல் ஹயஸ் வானில் மருதனார்மடம் நோக்கி தப்பிச் செல்லும் போது துரத்தி சென்ற பொலிஸார் மல்லாகம் பகுதியில் வாகனத்துக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தினர்.

மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம் அருகில் வீதியில் இருந்து வாள்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பனவும் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டது.

வாள்வெட்டில் காயமடைந்த 28 வயதான இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தப்பியோடிய வன்முறை கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்ய யாழ்ப்பாண பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினர், காங்கேசன்துறை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினர், 

தெல்லிப்பழை பொலிஸார் ஆகியோர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் வாள்வெட்டுக்கு இலக்கானவரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு