ஆசிரியை அடித்ததால் மாணவனின் விரல் நகம் சிதைவு! யாழ்.அச்சுவேலியில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
ஆசிரியை அடித்ததால் மாணவனின் விரல் நகம் சிதைவு! யாழ்.அச்சுவேலியில் சம்பவம்...

யாழில். ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவனின் கை நகம் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. 

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 4இல் கல்வி கற்கும் மாணவன் அப்பியாச கொப்பியில் ஒழுங்காக எழுதவில்லை என ஆசிரியை, மாணவனின் கையில் அடித்துள்ளார். அதனால் மாணவனின் கை நகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

அதனை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு கை நகம் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டமையால் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் கை நகம் அகற்றப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ள நிலையில் , வலய கல்வி திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு