வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழந்த விவகாரம், பொறுப்பதிகாரி உட்பட 8 பொலிஸாரிடம் விசாரணை...

ஆசிரியர் - Editor I
வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழந்த விவகாரம், பொறுப்பதிகாரி உட்பட 8 பொலிஸாரிடம் விசாரணை...

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமும் இளைஞரின் உயிரிழப்பின் போது கடமையிலிருந்த மேலும் 07 உத்தியோகத்தர்களிடமும் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை (05) மதியம் 2 மணியளவில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் மரண சாட்சி விசாரணை நடத்தப்படவுள்ளது.

யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது 28 வயதான நாகராஜா அலெக்ஸ் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு யாழ்.நீதவான் நேற்று(04) உத்தரவிட்டிருந்தார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு