யாழ்.நாவற்குழியில் கடலாமை இறைச்சியுடன் இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழியில் கடலாமை இறைச்சியுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை(03) கடலாமை இறைச்சி மீட்கப்பட்டிருப்பதுடன் உடமையில் வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 21 கிலோ கடலாமை இறைச்சி மீட்கப்பட்டது.

குருநகர் பகுதியில் பிடிக்கப்பட்ட கடலாமைகள் இரண்டினை நாவற்குழிப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இறைச்சியாக்கியபோதே சாவகச்சேரிப் பொலிஸார் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது கைதான சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு