யாழ்.நவாலியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்த முதியவர் பலி!

ஆசிரியர் - Editor I
யாழ்.நவாலியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்த முதியவர் பலி!

யாழ்ப்பாணம் - நவாலி பகுதியில் இன்றையதினம் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 70 வயதான அருளப்பு விமலதாஸ் என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.

நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம் அருகில் உள்ள வீதியில் இன்று காலை (20)முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு