நடிகர் விஜயின் அரசியல் வருகையை வரவேற்கிறேன் - கூறியவர் யார் தெரியுமா.!
தமிழக அரசியல் களத்தில் நீண்ட நாட்களாக சினிமா துறை சார்ந்த பிரபலங்கள் கோலோச்சி வருவது யாவரும் அறிந்த ஒன்றே. சில திரைப்பிரபலங்கள் தங்களது பிரபல்யத்தை அரசியல் களத்தில் பயன்படுத்தி லாபங்களை அறுவடை செய்ய நினைத்து மண்ணை கவ்வியதும் நாம் பார்த்த ஒன்றே.
தற்போது தமிழகத்தின் இருபெரும் திராவிட கட்சிகளின் வலுவாக தலைமைகளாக செயலாற்றி வந்த கலைஞர், ஜெயா ஆகியோர் களத்தில் இல்லாத காரணத்தினால் அவர்களின் இடங்களை எப்படியேனும் பிடித்துவிட வேண்டுமென்று தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்களிடையே ஓர் மறைமுக போட்டியே நிலவி வருகிறது. அந்த போட்டியின் நீட்சி தான், கமல் கட்சி துவங்கியதும், ரஜினி துவங்கவிருப்பதும்.
மற்றுமோர் புறம் கடந்த 2011 ஆம் ஆண்டே ஜெயாவுக்கு வெளிப்படையாக ஆதரவளித்த விஜய் ரசிகர் மன்றம் சற்று அமைதியாகவே இருந்து வரக்கூடிய நிலையில், விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்வியொன்றினுக்கு பதிலளித்துள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல், "எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி. எனக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பிடித்த தம்பி கண்டிப்பாக வரவேற்கிறேன் என்று பதில் அளித்து விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தினை தூவியுள்ளார்.