பெரும் எடுப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களும், படகுகளும் விடுதலை, இந்திய அழுத்தம்...

ஆசிரியர் - Editor I
பெரும் எடுப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களும், படகுகளும் விடுதலை, இந்திய அழுத்தம்...

யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்று கைதான 22 இந்திய மீனவர்களும் இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தலையீட்டின் பெயரில் உடனடியாகவே விடுவிக்கப்பட்டனர். 

பருத்தித்துறைக் கடற்பரப்பில் நேற்று மதியம் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு மாலை 5 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். 

இவ்வாறு 22 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட செய்தி இராமேஸ்வரத்தில் பெரும் அலையை ஏற்படுத்தியிருந்தது. 

இதேநேரம் இராமேஸ்வரத்திற்கு இரு நாள் பயணமாக இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற நிலையில் மீனவர்கள் நிதி அமைச்சரை நேரில் சந்தித்து, 

கைதான தமது உறவுகளை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததோடு தமது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை முன் வைத்தனர். 

மீனவர்களின் கோரிக்கையின் பெயரில் இலங்கை ஜனாதிபதியை தொடர்புகொண்ட இந்திய நிதி அமைச்சர் மீனவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரியதன் பெயரில், 

22 மீனவர்களும் அவர்களது படகில் இன்று அதிகாலை தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு