யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம், 5 வருடங்களின் பின் தண்டம் விதித்த நீதிமன்றம்!

ஆசிரியர் - Editor I
யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம், 5 வருடங்களின் பின் தண்டம் விதித்த நீதிமன்றம்!

ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்திற்கு எதிராக 2018ம் ஆண்டு அச்சமயத்தில் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றிய தி.கிருபனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

சுகாதார சீர்கேடு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் குறித்த வழக்கு மேவதிக நீதவான் நீதிவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அச்சமயத்தில் உணவக உரிமையாளர் குற்றத்தை ஏற்காத நிலையில் வழக்கானது நீதிமன்றில் தொடர் விசாரணைக்காக நியமிக்கப்ட்டு விசாரணை கடந்த 05 வருடங்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணைகள் நிறேவடைந்த நிலையில் இன்றைய தினம் 15.11.2023 தீர்ப்புக்காக வழக்கு திகதி இடப்பட்டு இருந்தது. 

நேற்றைய தினம் வழக்கின் தீர்ப்பை வழங்கிய மேலதிக நீதவான், இதுவரை நடைபெற்ற விசாரணைகளின் அடிப்படையில் உணவக உரிமையாளர் குற்றவாளி என தீர்ப்பளித்தார். 

அத்துடன் உணவக உரிமையாளரிற்கு 25,000/= தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.

உணவக உரிமையாளர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா அவர்கள் முன்னிலயாகி இருந்தார். வழக்கு தொடுநர் சார்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் ம. இராஜமேனன், மற்றும் சூ. குணசாந்தன் ஆகியோர் வழக்கினை நெறிப்படுத்தி இருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு