தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் நாடு திரும்ப இலகு பயண ஒழுங்கு குறித்து கூட்டமைப்பு பேச்சு..
இந்தியாவில் முகாம்களிலும் வெளியிலும் தங்கியிருக்கும் எமது உறவுகள் தாயகம் திரும்புவதற்கான இலகு பயண ஏற்காடுகளை மேற்கொண்டு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியத் தூதுவர் தர்ணசித் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
தாயகத்தில் இருந்து படகுகளில் தமிழ் நாட்டிற்குச் சென்ற எம் உறவுகள் இன்று தமிழ்நாட்டு அகதி முகாமின் நெருக்கடிகளால் மீண்டும் அதே அவலப் பயணத்தின் மூலம் தாயகம் திரும்புகின்றனர். போரின் காரணமாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் மக்கள் இந்தியாவிற்கு தப்பியோடினர். இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தாவில் பல்வேறு இடங்களிலும் உள்ள 150ற்கும் மேற்பட்ட முகாம்களில் உள்ளனர்.
- இவ்வாறு இந்தியாவில் தங்கியுள்ளவர்களில் தற்போது மே 05ல் 9 பேரும் , மே 16ல் 4 பேரும் , மே 29ல் 6 பேரும் ,
யூன் 3ல் 5 பேரும் என படகுகள்
மூலம் தாயகம் திரும்பியுள்ளனர் . இதில்
ஓர் 9 மாதக் குழந்தை தாய் தந்தையின்றி தனித்தே பயணித்துள்ளது.
தற்போது இந்தியாவில் இருந்து தாயகம் திரும்புவதானால் விசாவின்றித் தங்கியிருந்தமைக்கான குற்றப்பணத்தைச் செலுத்தியே விசாவினை பெற்றுத் தாயகம் திரும்ப முடியும் என்பதனால் அதற்கு அதிக பணம் செலவு செய்தே தாயகம் திரும்பவேண்டியுள்ளது. இவர்கள்
விமானம் மூலம் தாயகம் திரும்புவதற்காக நீண்டகாலமாக விண்ணப்பித்துள்ளனர்.
எனவே தமிழ்நாடு முகாம் மற்றும் வெளியில் தனியார் வீடுகளில் வாழும் எமது உறவுகளில் தாயகம் திரும்ப விரும்ப விரும்புவர்களில் முகாமில் உள்ளவர்களில் சிறுவர்களிற்கு பிறப்பு சான்றிதழினையும் வெளியில் வசிப்பவர்களிற்கான விசாக் கட்டணத்தை நீக்கி தாயகம் திரும்ப ஏற்ற ஒழுங்குகளை இந்திய அரசின் ஊடக மேற்கொண்டு உதவ வேண்டும்.
இதற்காக இந்திய அரசின் ஊடாக எமது உறவுகள் தாயகம் திரும்ப இந்திய அரசு பின்பற்றும் கட்டுப்பாடுகளை குறுகிய காலத்திற்கு தளர்த்துவதன் மூலம் அல்லது அவர்களை தனியான கப்பல்கள் மூலம் மன்னாரிற்கு அழைத்து வருவதன் மூலம் இவ்விடயத்திற்கு உடன் தீர்வு கண்டு உதவ முன்வர வேண்டும். எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறித்த விடயத்தினை உடனடியாக டில்லியின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்குரிய பதிலைப் பெற்று வழங்குவதாக தூதுவர் பதிலளித்துள்ளார்.குறித்த சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் தலைவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராயா , ம.ஆ.சுமந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதேநேரம் குறித்த விடயத்திற்கு ஓர் தீர்வினை வழங்குமாறு யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளன் கடந்த மே மாதம் 24ம் திகதி யாழில் உள்ள இந்தியத் தூதுவர் பாலச்சந்திரனிடம் ஓர் கோரிக்கை மனுவையும் கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. -105-