யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு 'யாழ்கானம்' இசை நிகழ்வில் மெளன அஞ்சலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு 'யாழ்கானம்' இசை நிகழ்வில் மெளன அஞ்சலி..

யாழ்.முற்றவெளி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் நடத்தப்பட்ட படுகொலையை மறைக்கவே அதே நாளில் இசை நிகழ்ச்சி நடாத்தப்படுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் இசை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது,கலையும் கலாச்சாரமும் சிறந்து ஓங்கும் இந்த யாழ்.மண்ணில் "யாழ்கானம்" என்ற இந்த இசை நிகழ்ச்சியை அளிப்பதில் சந்தோஷ் நாராயணனும் அவர் குழுவினரும் பெருமகிழ்ச்சி கொள்கின்றனர். 

இம்மண்ணும் இம்மண்ணில் வாழும் மக்களும் கண்ட துயர்கள் அநேகம்.ஒரு வருடத்தின் 365 நாட்களில் எந்த திகதியையும் எடுத்து வரலாற்று ஏடுகளைப் பின்னோக்கி புரட்டினாலும் அத்திகதியில் ஒரு கொடூர சம்பவம் ஒரு துயர்மிகு சம்பவம் நிகழ்ந்திருக்கும்.

ஏன், இன்றும் இத்திகதியில் சரியாக 36 வருடங்களுக்கு முன் யாழ்  வைத்தியசாலையில் நடந்த கொடூரமான நிகழ்வை நாம் துயருடன் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். 

கலை நிகழ்ச்சிகள் உள்ளத் துயர்களை நீக்கும் மருந்தாவன. அதனால் சந்தோஷ் நாராயணனும் அவரது குழுவும் இவ்விசை விருந்தை ஒரு இசை மருந்தாகவே மக்களுக்கு வழங்குகின்றனர்.

ஆதலால் பலதசாப்தங்களாக நடந்த கொடிய யுத்தத்தில் மறைந்த எம் நாட்டு மக்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திவிட்டு இம்மருந்தை அருந்துவதே பொருத்தமானதாய் இருக்கும்.

இயலுமானவர்கள் எல்லோரும் எழுந்து ஒருநிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகிறோம் - என தமிழிலும் ஆங்கிலத்திலும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அனைவரும் எழுந்து ஒரு நிமிட மௌன அஞ்சலியை உயிரிழந்தவர்களுக்கு செலுத்தினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு