யாழ்.மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கான மின் விநியோகத்தில் தொடக்க கட்டணம் 600 ரூபாயா? 400 ரூபாயா? மின்சாரசபை விளக்கம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கான மின் விநியோகத்தில் தொடக்க கட்டணம் 600 ரூபாயா? 400 ரூபாயா? மின்சாரசபை விளக்கம்...

யாழ்.மாவட்டத்திலுள்ள விவசாய காணிகளுக்கான ஆரம்ப மின்சார கட்டணத்தை மாற்றி அமைக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் யாழ்.மாவட்ட பிரதம பொறியியலாளர் லிங்கரூபன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பிராத்தியோக செயலாளர் இராமநாதன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவசாயம் தொடர்பான கலந்துரையாடலின்போது அங்கஜன் இராமநாதனின் பிரத்தியோக செயலாளர் யாழ்.மாவட்டத்தில் மின்சார மூலம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளிடமிருந்து இரு வேறுபட்ட கட்டணங்களில் மின்சார ஆரம்ப கட்டணம் அறவிடப்படுவதாக குற்றம் சாட்டினார்.

அதாவது சில விவசாயிகளுக்கு மின்சார ஆரம்ப கட்டணமாக 600 ரூபாவும் சில விவசாயிகளுக்கு ஆரம்ப கட்டணம் 400 ரூபாவாகவும் அறவிடப்படுவது விவசாயிகள் பாதிப்பதை அபிவிருத்திக் குழுத் தலைவர் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மின்சாரசபை பொறியியலாளரைப் பதில் வழங்குமாறு கூறினார்.

பதில் வழங்கிய இலங்கை மின்சார சபையின் யாழ்.மாவட்ட பிரதம பொறியியலாளர் ஆரம்பத்தில் மின்சாரத்தைப் பெற்ற விவசாயிகளுக்கு 600 ரூபா அறவிடப்படுவது உண்மை பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேரடியாக வருகை தந்து  கட்டணத்தை மாற்றி அமைக்க முடியும் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட இராமநாதன் உங்களிடம் தரவுகள் இருக்கின்றதுதானே நீங்களே மாற்றி அமைத்தால் என்ன என கேள்வி எழுப்பினார்.

இதன்போது பதில் அளித்த பொறியாளர் சில நடைமுறை சார்ந்த பிரச்சனைகள் மாற்றி அமைக்கும்போது ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்கள் நேரடியாக வருகை தந்தால் விடையங்களை இலகுவாக செய்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் வடமாகா ஆளுநர் பி.எச்.எம் சாள்ஸ் ஜனாதிபதி செயலகத்தின் வடமாகாண மேலதிக செயலாளர் இளங்கோவன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் பிரதேச செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு