யாழ்.மாவட்டத்தில் 1783 டெங்கு தொற்றாளர்கள்! கரவெட்டி பகுதியில் அதிக தொற்றாளர்கள்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 1783 டெங்கு தொற்றாளர்கள்! கரவெட்டி பகுதியில் அதிக தொற்றாளர்கள்...

யாழ்.மாவட்டத்தில் இம்மாத நடுப்பகுதி வரை 1783 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,  வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இவ்வாரம் புதன்கிழமை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவிக்கையில் யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில் யாழ்.பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் 256 நோயாளர்களும், தெல்லிப்பழை வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 84 நோயாளர்களும்,

சண்டிலிபாய் வைத்திய அதிகாரி பிரிவில் 156 நோயாளர்களும், சாவச்சேரி வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 139 நோயாளர்களும், பருத்தித்துறையை வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 213நோயாளர்களும், ஊர்காவற்துறை  வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 17 நோயாளர்களும், கோப்பாய் வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 175 நோயாளர்களும்,

நல்லூர் வைத்திய அதிகாரி பிரிவில் 149 நோயாளர்களும், சங்கானை வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 91 நோயாளர்களும், கரவெட்டி வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 305 நோயாளர்களும், உடுவில் வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 119நோயாளர்களும், வேலனை வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 21நோயாளர்களும், மருதாங்கேணி வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 28 நோயாளர்களும் மற்றும் காரை நகர் வைத்திய அதிகாரி பிரிவில் 30 நோயாளர்களுமாக மொத்தமாக 1783 பேர் மாவட்டத்தில் டெங்கு நோயளராக இனம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் தொடர்ச்சியாக பிரதேச வைத்திய அதிகாரி பிரிவினரால் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு