பாடசாலைக்கு பிள்ளையை ஏற்ற சென்றிருந்த சமயம் வீடு உடைத்துக் கொள்ளை!

ஆசிரியர் - Editor I
பாடசாலைக்கு பிள்ளையை ஏற்ற சென்றிருந்த சமயம் வீடு உடைத்துக் கொள்ளை!

பாடசாலையில் பிள்ளையை ஏற்ற சென்ற சமயத்தை பயன்படுத்தி வீட்டினுள் நுழைந்த திருடர்கள் 13 பவுண் நகை மற்றும் ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்கள் என்பவற்றை திருடி சென்றுள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை, மதியம் பாடசாலையில் இருந்து பிள்ளைகளை அழைத்து வர சென்ற சமயம், வீட்டினுள் நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த 13 பவுண் தங்க நகைகளையும், ஒரு தொகை வெளிநாட்டு காசுகளையும் திருடி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு