புதிய மதுபான நிலையங்களுக்கு அனுமதிக்ககூடாது என்ற அவைத்தலைவர் சீ.வி.கேயின் கோரிக்கை நிராகரிப்பு!

ஆசிரியர் - Editor I
புதிய மதுபான நிலையங்களுக்கு அனுமதிக்ககூடாது என்ற அவைத்தலைவர் சீ.வி.கேயின் கோரிக்கை நிராகரிப்பு!

யாழ்.மாவட்டத்தில் புதிதாக எந்த ஒரு மதுபானசாலையும் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் தீர்மானம் எடுக்க வேண்டும் என வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்தபோதிலும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேற்படி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெல்லிப்பளையில் புதிதாக மதுபான சாலை ஒன்று அமைக்க எடுத்த முயற்சிக்கு பொதுமக்களின் எதிர்ப்பு காணப்பட்டமை தொடர்பில் விவாதிக்கப்பட்ட போதே வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் மேற்படி கோரிக்கையினை முன்வைத்தார்.

யாழ்ப்பாணத்தில் மதுபான சாலைகள் போதுமான அளவு உள்ளது இனி யாழ்.மாவட்டத்திற்கு மதுபான சாலைகள் எதுவும் புதிதாக தேவையில்லை. புதிய மதுபான சாலைகளுக்குரிய அனுமதியினை வழங்கக் கூடாது என தீர்மானிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த விடயத்தில் தலையிட்ட வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ் மாவட்டத்திற்கு எத்தனை மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்க முடியும் என்ற ஒரு நியதி உள்ளது அதனை பரிசீலித்து தான் தீர்மானிக்க முடியும்.

யாழ். மாவட்டத்தில் 146 மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்க முடியும் என்றும் அதாவது கள்ளுத் தவறணைகளையும் சேர்த்து எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவை தலைவரின் தீர்மானம் கைவிடப்பட்டது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு