பெண் ஒருவரை கடத்தி கப்பம் பெற முயற்சித்த இரு பெண்கள் கைது! கடத்தப்பட்ட பெண் மீட்பு..

ஆசிரியர் - Editor I
பெண் ஒருவரை கடத்தி கப்பம் பெற முயற்சித்த இரு பெண்கள் கைது! கடத்தப்பட்ட பெண் மீட்பு..

பெண்  ஒருவரைக் கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரு பெண்களை  மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, 9 மில்லி மீற்றர் துப்பாக்கியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கட்டுனேரிய - லான்சிகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 24 ஆம் திகதி  கடத்தப்பட்டார்.

குறித்த பெண்ணின் கணவர், தனது மனைவியை  சிலர்  கடத்திச் சென்றுள்ளதாகவும், அவரை விடுவிக்க பணம் கோரியதாகவும் மாரவில பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில்  நடவடிக்கை எடுத்த மாரவில பொலிஸார்  கொச்சிக்கடை - தலுவகொடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்டதுடன் சந்தேகத்தில் இருவரைக் கைது செய்துள்ளனர்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு