யாழ்.வட்டுக்கோட்டையில் தாய்ப்பால் அருந்திவிட்டு உறங்கிய குழந்தை உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டையில் தாய்ப்பால் அருந்திவிட்டு உறங்கிய குழந்தை உயிரிழப்பு..

தாய்ப்பால் அருந்தி விட்டு ஏனையில் உறங்கிய 03 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.

யாழ்.வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த கி.ஹரிகரன் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.

தாய் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தாய்ப்பால் கொடுத்து விட்டு குழந்தையை ஏனையில் உறங்க வைத்துள்ளார். 

நீண்ட நேரமாக குழந்தை எழும்பாததால் , சந்தேகம் அடைந்து குழந்தையை எழுப்பியபோது குழந்தை அசைவற்று இருந்துள்ளது.

அதனை அடுத்து குழந்தையை சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு