யாழ்.நாவற்குழி விபத்தில் இரு குழந்தைகள் உட்பட 4 பேர் காயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழி விபத்தில் இரு குழந்தைகள் உட்பட 4 பேர் காயம்..

யாழ்.நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 2 குழந்தைகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து பூநகரி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது முச்சக்கர  வண்டியில் பயணித்த சாரதி 2 குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் தாயாரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பொதுமக்களின் உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் கிளிநொச்சி - பூநகரி - 4ம் கட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிக காற்று கட்டுப்பாட்டை இழக்க செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த வீதியில் பயணிப்பவர்கள் மிகுந்த அவதானமாக பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு