யாழ்.பருத்தித்துறை கடலில் தவறி விழுந்த மீனவர் சடலமாக மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை கடலில் தவறி விழுந்த மீனவர் சடலமாக மீட்பு..

பலநாள் மீன்பிடிப்படகில் மீன்பிடிக்க சென்ற நிலையில் கடலில் விழுந்து உயிரிழந்த மீனவர் ஒருவரின் சடலம் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பகுதியில் இருந்து நேற்று  (16) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மீன்பிடிக்க சென்ற சுமேதம், கரப்புர திருகோணமலையைச் சேர்ந்த 44 வயதுடைய ஆர்.பி.நிமல் கருணாரத்ன என்பவரே நடுக்கடலில் தவறி வீழ்ந்தது உயிரிழந்திருந்தார்.

பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகைள முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு