நல்லூரில் காணாமல்போன சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாட பொலிஸார் திட்டம்...

ஆசிரியர் - Editor I
நல்லூரில் காணாமல்போன சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாட பொலிஸார் திட்டம்...

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்குச் சென்றிருந்த நிலையில் காணாமல்போன இரண்டரை வயதுச் சிறுமியைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடிவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி காணாமல்போனமை தொடர்பில் அவரது தாயார் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த சிறுமி, தனது தாய், பாட்டி மற்றும் ஒரு வயதுடைய சகோதரனுடன் கடந்த 6ஆம் திகதி நல்லூர் கோவிலுக்கு சென்றுள்ளார்.

இவர்களுடன் நட்பாக இருந்த பெண் ஒருவர் அருகில் உள்ள சந்தைக்கு செல்வதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

எனினும் குறித்த பெண்ணும், சிறுமியும் திரும்பி வராத காரணத்தினால் சிறுமியின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு