நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபருடன் இருந்த பொலிஸ் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்! யாழ்.பொலிஸார் தீவிர விசாரணை...

ஆசிரியர் - Editor I
நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபருடன் இருந்த பொலிஸ் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்! யாழ்.பொலிஸார் தீவிர விசாரணை...

யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் வழக்கு தவணைகளுக்கு சமூகம் அளிக்காததால் , பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபருடன் , பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் தங்கியிருந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.நாயன்மார்கட்டு பகுதியில் , வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள சந்தேக நபர் ஒருவர் மீது நேற்று முன்தினம் புதன்கிழமை வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது

காரில் வந்த கும்பல் ஒன்றே தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின்போது தன்னுடன் பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்த உத்தியோகஸ்தரும் இருந்த வேளையில் தான் தன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் தெரிவித்துள்ளார்.

அந்நிலையில் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபருடன் புலனாய்வு உத்தியோகஸ்தர் உடன் இருந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு