“நான் நலமுடன் இருக்கின்றேன்“- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாடகி எஸ்.ஜானகி!!
இந்தியத் திரையிசை உலகின் மூத்த பின்னணிப் பாடகிகளில் ஒருவர், எஸ்.ஜானகி. இவரது உடல் நலம் குறித்து தவறான செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
“நான் ரொம்ப நல்லாயிருக்கேன்.என்னைப் பற்றி எவரும் கலைப்படாதீர்கள்“ என்று ஜனாகி தெரிவித்துள்ளார்.
எஸ்.ஜானகியின் உடல்நலம் குறித்து அடிக்கடி வதந்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. இதுகுறித்து ஜானகி, பலமுறை கோபத்துடனும் ஆதங்கத்துடன் பதிலளித்துவிட்டார். ஆனாலும், வதந்திகள் நின்றபாடில்லை.