SuperTopAds

பெண்ணின் கர்ப்பபை அகற்றப்பட்ட விவகாரம், சுகாதார அமைச்சிடம் விளக்கம் கோரியுள்ள யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழு...

ஆசிரியர் - Editor I
பெண்ணின் கர்ப்பபை அகற்றப்பட்ட விவகாரம், சுகாதார அமைச்சிடம் விளக்கம் கோரியுள்ள யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழு...

கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கர்ப்பப்பை அகற்றிய சம்பவம் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் மத்திய சுகாதார அமைச்சிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பிள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பம் சார்பில் கணவரால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் பின்வருமாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது

யூன் மாதம் கிளிநொச்சி வைத்திய சாலையில் தனது கர்ப்பவதி மனைவி பிரசவத்துக்காக சென்றபோது வைத்தியர்களால் உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் பாரபட்சம் காட்டப்பட்டதால் எனது குழந்தை இறந்துள்ளது.

எனது குழந்தை இறந்தமைக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் குழந்தை இறந்ததுடன் கர்ப்பப்பை அகற்றுவதற்கு  எனது மனைவிக்கோ அல்லது என்னிடமோ வைத்தியர்கள் கேட்காத நிலையில் 

எனது குழந்தை இறந்தமைக்கும் எனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்பட்டமைக்கும் நீதி கிடைக்க வேண்டுமென  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைபாட்டை ஏற்றுக்கொண்ட ஆணைக்குழு கிளிநொச்சி வைத்தியசாலையில் முறைப்பாட்டளர் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில்  மத்திய சுகாதார அமைச்சிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளது.