2 தடவைகள் அழைத்தும் கண்டுகொள்ளாத பொலிஸ் அதிகாரி! 3 தடவையும் அழைத்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு..

ஆசிரியர் - Editor I
2 தடவைகள் அழைத்தும் கண்டுகொள்ளாத பொலிஸ் அதிகாரி! 3 தடவையும் அழைத்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு..

இரு தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்டும் வருகை தராத யாழ்.தலைமை பொலிஸ் பரிசோதகர் லியகேவை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மூன்றாவது தடவை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, முறைப்பாட்டாளர் ஒருவர் தன்னை தலைமை பொலிஸ் பரிசோதகர் அச்சுறுத்தியதாக யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தலைமை பொலிஸ் பரிசோதகருக்கு இரு தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையிலும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை.

இதனால் மூன்றாவது அழைப்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளரின் கையொப்பத்துடன் தலைமை பொலிஸ் பரிசோதகருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அழைப்புக் கடிதத்தில் மனித உரிமை ஆணைக்குழு 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்கச் சட்டத்தின்  முறைப்பாடானது விசாரணை செய்யப்படடிள்ளது. 

2023.08.17 திகதி மு.ப 11.30 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு - யாழ்.காரியாலயத்திற்கு  சாலபொருத்தமான ஆணங்களுடன் ஆணைக்குழு முன்னிலையில் சமூகமளிக்க வேண்டுமென்பதை அறிவிக்கப்படுகிறது.

சட்டரீதியான அறிவுறுத்தல்களையும் குறித்த தரப்பினர் எழுத்து மூலமான விளக்கங்களை தொலைபேசி இலக்கங்களுடன் சேர்ந்து   அறிவிக்கப்படுகிர்கள்.

ஆணைக்குழுவின் முன்நிலையில் சமூகமளிக்கத் தவறும் பட்சத்தில் அது ஆணைக்குழுவினை அவமதிக்கு அல்லது அவகெளரப்படுத்தியதாகக் கருதப்படும்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளரின் கையொப்பத்தின் கீழ் வழங்கப்படுகின்றது என குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு