யாழ்.மாநகரில் இரு உணவகங்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய சீல்!! பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அதிரடி..
யாழ்.மாநகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்கள் நீதிமன்ற உத்தரவின் பெயரில் மாநகர பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் செவ்வாய் கிழமை யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளி வழிகாட்டலில் நகரிலுள்ள உணவகங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது யாழ்.மத்திய பேருந்து நிலையத்தின் பின்புறமாகவும், பண்ணை பகுதியிலும் இயங்கிவந்த இரு அசைவ உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து குறித்த இரு உணவகங்களினதும் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது குறித்த வழக்கு நேற்று மேலதிக நீதிவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது,
இரு உரிமையாளர்களையும் தலா 1 லட்சம் ரூபாய் பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி சுகாதார சீர்கேடு சீர்செய்யப்படும்வரை உணவகத்திற்கு சீல் வைத்து மூட உத்தரவிட்டார்.
மேலும் வழக்கு 18ம் திகதி 10ம் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நேற்று மாலை இரு உணவகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.