SuperTopAds

சற்றுமுன் சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு..! 20 இலட்சம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்..! விழிபிதுங்கி நிற்கும் மத்திய மாநில அரசு..!!

ஆசிரியர் - Editor II
சற்றுமுன் சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு..! 20 இலட்சம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்..! விழிபிதுங்கி நிற்கும் மத்திய மாநில அரசு..!!

பசுமை சாலையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் சுமார் 20 இலட்சம் பொது மக்கள், விவசாயிகள் தங்கள்வீடுகளில் இன்று கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் 08 வழி பசுமை சாலைக்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டத்தால் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகள் கடும் பாதிப்புள்ளாகிறது. இதில் ஆயிரம் ஹெக்டேர் அரசு நிலம் வழியாகவும், 4 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வழியாகவும் இந்த பாதை அமைகிறது. மேலும், சேர்வராயன், கல்வராயன் மலை உள்பட 8 மலைகள் வழியாக,120 ஹெக்டேர் வனப்பகுதியும் வழியாகவும் இந்த சாலை அமைகிறது.

23 பெரிய பாலங்களும், 156 சிறு பாலங்களும், 9 மேம்பாலங்களும், பாலங்களுக்கு கீழ் 22 வாகன கீழ் வழிச்சாலையும், 2 பாலங்களுக்கு கீழ் இன்னொரு வழிச்சாலையும் அமைக்கப்படுகிறது. வனப் பகுதியில் 3 சுரங்கப் பாதைகளும், 8 சுங்க சாவடிகளும், லாரிகள் மற்றும் பஸ்கள் நிறுத்தும் இடம் 10 இடங்களில் அமைக்கப்பட உள்ளது.

இதனால் விவசாயிகளும், கிராம மக்களும், சுற்றுசூழல் ஆர்வாளர்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சேலம் பசுமை வழிச்சாலை பற்றி முகநூலில் பதிவு செய்தால் கூட தமிழக அரசு கைது நடவடிக்கையை ஆரம்பித்தது. தமிழக அரசின் இந்த அராஜக போக்கை கண்டித்து, தமிழக அரசியல் கட்சிகள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கைளை வெளியிட்டு வருகின்றனர்.

இருப்பினும், சாலை அமைப்பதற்கு தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்துவதற்காக, நில அளவீடு செய்யும் பணியை வருவாய் துறையினர் சர்வாதிகாரத்துடன் செய்துவருகின்றனர்.