யாழ்.வடமராட்சி கிழக்கில் கடற்படைக்கு காணி சுவீகரிக்க முயற்சி! அரசியல்வாதிகள் மக்கள் கடும் எதிர்ப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் கடற்படைக்கு காணி சுவீகரிக்க முயற்சி! அரசியல்வாதிகள் மக்கள் கடும் எதிர்ப்பு..

யாழ்.வடமராட்சி கிழக்கில் கடற்படையின் காவலரணுக்கு காணி சுவீகரிப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு  பிரதேசசெயலர் பிரிவில் உள்ள J/433 முள்ளியான் கிராம சேவகர் பிரிவில் உள்ள கட்டைக்காடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 14 பரப்பு காணியின் நடுவே 1.1/2 (ஒன்றரைபரப்பு) காணியை கடற்படையின் காவலரண் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் காணி சுவீகரிக்கும் நோக்கில் நில அளவை செய்ய வந்த நில அளவை திணைக்களத்தினரை காணி உரிமையாளர் பொது அமைப்புகளின் பிரதி நிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 

செல்வராசா கஜேந்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் யாழ்.மாவட்ட பிரதிநிதி முரளி, வடமராட்சி கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளான சிவகுமார், 

சற்க்குணேஸ்வரி, காண்டீபன் ஆகியோரும் பொதுமக்களும் கலந்துகொண்டு தமது எதிர்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு