யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் 2 வருடங்களின் பின் உணவகம் திறப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் 2 வருடங்களின் பின் உணவகம் திறப்பு!

2 வருடங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த யாழ்.வேம்படி மகளிர் பெண்கள் உயர்தர பாடசாலையின் உணவகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

2019 காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட கோவிட் 19 நோய்த் தாக்கம் காரணமாக பாடசாலைகள் பல மாதங்களாக மூடப்பட்டது.

மீண்டும் பாடசாலைகள் திறக்கப்பட்டும் யாழ்.வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையின் உணவகம் செயற்படுத்தப்படாததால் 

அதிகாலைவேளை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவிகள் பாடசாலையில் உணவு கிடைக்காததால் பாதிப்புக்கு உள்ளாவதாக பெற்றோரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அது மட்டுமல்லாது பாடசாலையில் விளையாட்டுகளில் ஈடுபடும் மாணவிகள் பாடசாலையில் உணவகம் இல்லாததால் பெரும் அசௌகரியஙகளை எதிர் நோக்கினர்.

குறித்த விடயம் தொடர்பில் கவனம் எடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்ட  உணவகம் இயங்கமைக்கான காரணத்தை கேட்டறிந்த நிலையில் இட வசதி பிரச்சனை காரணமாக 

உணவகத்தை மீள செயல்படுத்துவது தொடர்பில் சில கால தாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்தார். 

இதனையடுத்து அமைச்சர் எடுத்த துரித நடவடிக்கையால் திருநெல்வேலி அம்மாச்சி உணவகத்தினால் வேம்படி பாடசாலையில் உணவகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு