யாழ்.மாவட்டத்தில் திரிபோஷா திருட்டு! வேலியே பயிரை மேயும் துயரம்..
யாழ்.மாவட்டத்தில் குழந்தைகளுக்கான திரிபோஷா சத்து உணவு வழங்கலில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாவட்டத்திற்கென சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட திரிபோசா ஒரு மாதத்திற்கு விநியோகிக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த ஜூன் மாதம் குறிப்பிட்ட ஒரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு வழங்கப்பட இருந்த திரிபோஷா பொதிகளில் சுமார் 30 பைகள் களவாடப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் திரிபோசா மாவுக்கு தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் அதனை சாட்டாக வைத்து அடுத்த முறை கிடைக்கும் என திரிபோஷா வழங்கப்படாத தாய்மார் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த திரிபோஷா பொதிகள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் களவாடப்படாத நிலையில் அதனை மேற்படி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு கொண்டு சென்றவர்களும், அதனை அனுப்பியவர்களும் களவாடியதாக அறியக்கிடைத்துள்ளது.
இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் திரிபோசா வழங்கப்பட்டுவரும் நிலையில் கிடைக்காதவர்கள் ஏன் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் அதிகாரிகளின் தொடர்ச்சியான ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.