ஆங்கிலக் கால்வாயை நீந்தி கடந்து சாதனை படைத்த மாற்றுத்திறனாளி
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தோர் நகரைச் சேர்ந்தவர் சதேந்திர சிங் (29). மாற்றுத்திறனாளியான இவர் அரசு வேலையில் பணியாற்றி வருகிறார்.
இவரின் கால்களை செயலிழந்த நிலையில் உள்ளன. இருப்பினும் சிங் தனது முயற்சியை கைவிட வில்லை. விடாமுயற்சி விஸ்பரூப வெற்றி என்பதற்கு ஏற்ப சிங் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்தார். கடந்த மாதம் அரபிக்கடலில் 36 கி.மீ. தூரத்தை 5 மணி 43 நிமிடங்களில் கடந்தார்.
மாற்றுத்திறனாளியாக இந்த தூரத்தை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில் சுதேந்திர சிங் ஆங்கிலக் கால்வாயை கடந்து புதிய சாதனைப் படைத்துள்ளார். இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 4 மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர்கள் கலந்து கொண்டனர்.
அதில் சிங் 12 மணி நேரம் 26 நிமிடங்களில் கடந்தார். ஒரு மாற்றுத்திறனாளியான இவரின் சாதனை அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
இதற்கு முன் கொல்கத்தாவைச் சேர்ந்த ரஹ்மான் பைடியா கிப்ரால்டார் கால்வாயை கடந்த முதல் மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் ஆசியக்கண்டத்தில் ஆங்கிலக் கால்வையை கடந்த முதல் மாற்றுத்திறனாளி என்ற சாதனையும் படைத்துள்ளார்.