இனப் பிரச்சனையை தீர்க்கும் பேச்சுவார்த்தைகளை ஒழுங்கமைக்க தயார்! அர்ஜுன் ஹர்தாஸ்..

ஆசிரியர் - Editor I
இனப் பிரச்சனையை தீர்க்கும் பேச்சுவார்த்தைகளை ஒழுங்கமைக்க தயார்! அர்ஜுன் ஹர்தாஸ்..

இலங்கையில் தீர்க்கப்படாத இனப் பிரச்சனைகள் தொடர்பில் இணக்ககப்பாடுகளை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஒழுங்கமைப்பதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க யூத கமிட்டியின் (AJC) ஆசிய பசிபிக் நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதியும் இஸ்ரேலுக்கான முன்னணி தூதரகங்களுக்கான உயர்மட்ட இராஜதந்திர பணிகளை ஒழுங்கமைத்து வருபவருமான அர்ஜுன் ஹர்தாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியளாளர்களுடனான சினேகாபூர்வமான கலந்துரையாடலின் பின் ஊடக சந்திப்பைபில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் மேலும் தெரிவிக்கையில், நான் இலங்கைக்கு பல தடவைகள் வந்துள்ளேன் ஆனால் வடமாகாணத்திற்கு மேற்கொண்ட முதலாவது விஜயம் இதுவே.

யாழ்ப்பாணத்தில் அரச உயர் மட்ட அதிகாரிகள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து இங்குள்ள மக்களின் அரசியல் நீதியான பிரச்சனை அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினேன்.

அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அறியக்கூடியதாக இருந்ததுடன் இங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வெளிப்படையான கருத்துக்களை பரிமாறியிருந்தார்கள்.

அரசியல்  கட்சிகளுக்கிடையே நடாத்தப்படுகின்ற பேச்சுவார்த்தைகளுக்கு நோர்வே அரசாங்கம் மற்றும் ஜப்பான் அரசாங்கம் போன்று அரசாங்கங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்க முடியாது.

ஆனால் இரு தரப்பினர் தமக்குள்ளேயுள்ள முரண்பாடுகளைப் பற்றி பேச முற்படுகின்றபோது வெளிநாட்டிலும் சரி உள்நாட்டிலும் சரி இரு தரப்பினரையும் ஒரே மேசையில் அமரவைப்பதற்கு தேவையான முயற்சிகளை எம்மால் மேற்கொள்ள முடியும்.

அமெரிக்காவிலுள்ள முஸ்லீம்களுக்கும் யூதர்களுக்குமிடையேயுள்ள பிணக்குகளைப் பேசி தீர்வுகளைக் காண்பதற்கான முயற்சியை நாம் மேற்கொண்டோம்.

எமது நிறுவனம் அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்குகின்ற நிலையிலும் நாம் அமெரிக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அல்ல அமெரிக்க அரசாங்கம் தவறிழைக்கும்  சந்தர்ப்பத்தில் அதனை தட்டி கேட்பதற்கு நாமே முன் நிற்போம்.

ஆகவே எமது நிறுவனம் ஆசிய பசுபிக் நாடுகளை தளமாகக் கொண்டு செயல்படுகின்ற நிலையில் அந்த நாடுகளிடையே நிலவும் உள்நாட்டுப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான அடித்தளத்தை வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு