யாழ்ப்பாணம் - கொழும்பு புகைரத பாதை புனரமைப்பு பணியின் 2ம் கட்டம் 2024 ஐனவரியில் ஆரம்பம்...
யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் பாதை புனரமைப்பின் 1ம் கட்டத்தை இந்தியா 6 மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
91.27 மில்லியன் டொலர் செலவில் இந்தியா இந்த கொழும்பு - யாழ் புகையிரத பாதை புனரமைப்பு திட்டத்தை நிறைவு செய்துள்ளது.
இதன் 2ம் கட்டம் அடுத்த ஆண்டு ஐனவரியில் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே கட்டுமான சர்வதேச நிறுவனத்தினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு , புகையிரத பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய இவற்றில் பயணிக்கும் புகையிரதங்கள் மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும்.
இதனால் கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான பயண நேரம் பெருமளவில் குறைவடையும்.
இந்தியா இதுவரை சுமார் 300 கி.மீ புகையிரத பாதையை மேம்படுத்தியுள்ளதுடன்,
இலங்கையில் சுமார் 330 கி.மீ தூரத்திற்கு நவீன சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளையும் வழங்கியுள்ளது.