SuperTopAds

மாணவி ஒருவரை பாடசாலையில் இணைக்குமாறு சிபார்சு கடிதம் அனுப்பிய வடமாகாண ஆளுநர்! ஆட்டுவிப்பது இவரா?

ஆசிரியர் - Editor I
மாணவி ஒருவரை பாடசாலையில் இணைக்குமாறு சிபார்சு கடிதம் அனுப்பிய வடமாகாண ஆளுநர்! ஆட்டுவிப்பது இவரா?

யாழ்.பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலையில் தரம் 6ல் மாணவி ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக மத்திய அரசினால் வெளியிடப்பட்டபட்ட  வெட்டுப் புள்ளியை பெறாத நிலையில் அந்த மாணவிக்கு அனுமதி வழங்குமாறுகோரி வடமாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ்சின் கையெழுத்துடன் கடிதம் அனுப்பப்பட்டமை ஆதாரத்துடன் சிக்கியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஏற்கனவே 10 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய உதவிச் செயலாளர் என்ற பதவியை வகித்து தற்போது மீண்டும் ஆளுநர் செயலகத்தில் திட்டமிடல் பிரிவில் இணைக்கப்பட்ட செல்வநாயகமே குறித்த கடிதத்தை அனுப்புவதற்குரிய ஏற்பாடுகளை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செல்வநாயகம் ஆளுநர் செயலகத்தில் இருந்தபோது பல்வேறுபட்ட நிர்வாக முறைகேடுகளுடன் தொடர்பு பட்டவர் என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்த நிலையில்  வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன உதவி செயலாளர் என்ற பதவி விலக்கி தகுதியற்றவர் என முன்னாள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு அறிவித்த நிலையில் ஆளுநர் செயலகத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டவர்.

குறித்த அதிகாரியை தற்போதைய வடமாகாண ஆளுநர் சாள்ஸ் மீண்டும் ஆளுநர் செயலகத்தில் உதவிச் செயலாளர் நியமனம் வழங்குவதற்காக எண்ணிய நிலையில் அவ்வாறான நியமனம் ஒன்றை வழங்க முடியாது என மூத்த அதிகாரிகள் போர்க்கொடி தூக்கியதால் உதவி திட்டமிடல் அதிகாரி என்ற ஒரு பதவி நிலையை உருவாக்கி தனது தனிப்பட்ட வேலைகளை பார்ப்பதற்காகு அமர்த்தியுள்ளதாத் தெரியவருகிறது.

ஆளுநர் செயலகத்தில்  நிர்வாக விடையங்களுக்கான கடிதப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்காக ஆளுநரின் செயலாளர் மற்றும் உதவிச் செயலாளர் என இரு பதவி நிலைகள் நிர்வாக ரீதியாக ஏற்படுத்தப்பட்ட நிலையில் சில முறைகேட்டுக் கடித நடவடிக்கைகளுக்காக ஆளுநரின் கையொப்பத்தை செல்வநாயகம் பயன்படுத்துகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.

தற்போது பருத்தித்துறை பெண்கள் மெதடிஸ் உயர்தர பாடசாலையில் மாணவி ஒருவரை அனுமதிக்குமாறு ஆளுநரின் செயலாளரோ அல்லது உதவிச் செயலாளரோ கையெழுத்து இடாமல் ஆளுநரால்  நேரடியாக கையொப்பமிட்டு குறித்த பாடசாலைக்கு  கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலையான பரு. மெதடிஸ் பெண்கள் பாடசாலைக்கு தரம் ஆறுக்கான வெட்டுப் புள்ளிகளை மத்திய கல்வி அமைச்சு வெளியிடும் நிலையில் அதனை மீறும் வகையில்  நிர்வாக நடைமுறைகளை மீறி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பெரும்பாலும் ஆளுநர் செயலகத்துக்கு வரும் பொதுமக்கள் முறைப்பாடுகளுக்கு நடவடிக்கைகளுக்காக ஆளுநரின் செயலாளர் உதவிச் செயலாளர் அல்லது இணைப்புச் செயலாளரினால் நடவடிக்கை கடிதங்கள் அனுப்பப்படுவது வழமை.

ஆனால் குறித்த கடிதத்தில் ஆளுநரின் செயலாளராக இருப்பவர்கள் எவரும்  கையெழுத்திடாமல் ஆளுநரின் கையொப்பத்துடன் மட்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆளுநர் செயலகத்திற்கு அனுப்பப்பட்ட பாடசாலை இணைப்பு தொடர்பான  கோரிக்கைக்கை  தொடர்பில் நிர்வாக விடையங்களை அறிந்த ஆளுநரின் செயலாளர் மற்றும் உதவி செயலாளர் செயலாளர்கள் குறித்த மாணவியை அனுமதிக்க வேண்டுமென பாடசாலை அதிபருக்கு கடிதம் எழுத வாய்ப்பு இல்லை.

அது மட்டுமல்லாது ஆளுநர் செயலகத்தால் ஒரு மாணவியை இணைத்துக் கொள்ளுமாறு தேசிய பாடசாலை ஒன்றுக்கு ஆளுநர் நேரடியாக கடிதம் எழுதும் முறைமையும் இல்லை.

ஆளுநர் செயலகத்துக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் முறைப்பாட்டின் காரணங்களை குறிப்பிட்டு  ஆராய்ந்து  பதில் அனுப்புமாறு 

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வடமாகாணக் கல்வி பணிப்பாளரிக்கு தகவல் அனுப்புவதுடன் அதன் பிரதி ஒன்றை முறைப்பாட்டாளருக்கு வழங்குவது ஆளுநர் செயலகத்தின் நிர்வாக விடையங்களாகும் .

இவற்றையெல்லாம் தாண்டி பருத்தித்துறை  மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலை அதிபருக்கு  மாணவி ஒருவரை இணைத்துக் கொள்ள வேண்டும் என ஆளுநரின் கையொப்பத்துடன் முதற் கடிதம் அனுப்பப்பட்டமை யாரோ ஒரு நபரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக நிர்வாக விடையங்களை மீறுவதாக அமைகிறது.

கடந்த தடவை பி எஸ் எம் சாள்ஸ் ஆளுநராக இருந்தபோது ஆளுநர் செயலகத்துக்கு அதிக வாகனங்களை பயன்படுத்தியமை முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின்  பயன்படுத்திய முதலமைச்சர் வாகனத்தை ஆளுநரின் தனிப்பட்ட நபர்கள் பயன்படுத்தியமை தொடர்பில் முறைப்பாடுகள் கொழும்புவரை சென்றது.

இவ்வாறான நிலையில் தற்போது நிர்வாக விடையங்களை மீறி மத்திய பாடசாலை அனுமதிக்காக  கடிதம் அனுப்பப்பட்டமை அம்பலத்துக்கு வந்துள்ளது.

குறித்த கடிதத்தை அவதானித்த ஆளுமையுள்ள நிர்வாக விடையங்களை அறிந்த அதிபர் எமது பாடசாலை மத்திய கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலை எனவும் மாணவர்களை அனுமதிக்கும் வெட்டு புள்ளி தொடர்பில் மத்திய கல்வி அமைச்சுத்தான் தீர்மானிக்க வேண்டும் உங்கள் கோரிக்கையை மத்திய கல்வி அமைச்சுக்கு அனுப்புமாறு ஆளுநர் செயலகத்தை அறிவுறுத்தியுள்ளாராம் என அறியக் கிடைத்துள்ளார்.