யாழ்.மண்டைதீவில் கடற்படையின் தேவைக்காக மக்களின் காணிகளை சுவீகரிக்க முஸ்தீபு! எதிர்க்க ஒன்று திரளுமாறு அழைப்பு...

ஆசிரியர் - Editor I
யாழ்.மண்டைதீவில் கடற்படையின் தேவைக்காக மக்களின் காணிகளை சுவீகரிக்க முஸ்தீபு! எதிர்க்க ஒன்று திரளுமாறு அழைப்பு...

யாழ்.மண்டைதீவில் மக்களின் காணிகளை கடற்படையின் தேவைக்காக  சுவீகரிப்பு நடவடிக்கை இடம்பெறவுள்ளது. அதனை தடுப்பதற்கு அனைவரையும் இன்று மண்டைதீவில் அணிதிரளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில்,

வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, 

வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்று புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும்,

இன்று (12) காலை.7.30 மணியளவில் மண்டைதீவு கிழக்கில் நடைபெறவுள்ள எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுங்கள் - என்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு