வடமாகாண பிரதம செயலாளரின் இடமாற்றத்தை நிறுத்த துடியாய் துடிக்கிறாராம் ஆளுநர்! நன்றிக் கடன் என அரச அதிகாரிகளே முணு..முணுப்பு...

ஆசிரியர் - Editor I
வடமாகாண பிரதம செயலாளரின் இடமாற்றத்தை நிறுத்த துடியாய் துடிக்கிறாராம் ஆளுநர்! நன்றிக் கடன் என அரச அதிகாரிகளே முணு..முணுப்பு...

வடமாகாண சபையின் பிரதம செயலாளராக கடமையாற்றும் சமன்பந்துள சேன ஓய்வுபெற இன்னும் ஒரு வருடங்கள் இருக்கின்ற நிலையில் அவரை வடமாகாணத்திலேயே கடமையாற்ற அனுமதிக்குமாறு ஆளுநர் சார்ஸ் ஜனாதிபதி செயலகத்துக்கு எழுத்து மூலமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

பதின் மூன்றாவது திருத்த சட்டத்தை அமுல் படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் செயலாளரான கலாநிதி விக்னேஸ்வரன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கான வரைபு ஒன்றையும் கையளித்தனர்.

பிரதானமாக 13வது திருத்தத்தின் பிரகாரம் மாகாண தமிழ் மொழியாக்கத்தை உறுதிப்படுத்தும் முகமாக ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் அந்த மாகாணத்தின்  நிர்வாக மொழி அடிப்படையில் நியமிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்த நிலையில் வடமாகாண பிரதம செயலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் கூறினர்.

அதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்த நிலையில் வடமாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் பிரதம செயலாளரான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த  சமன் பந்துள சேனவை மாற்ற வேண்டாம் என கடிதம் எழுதியுள்ளார்.

ஆளுநரின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொண்ட வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ஸ் நிர்மநாதன் மற்றும் வினோ எம்பி ஆகியோர் வடக்கின் தற்போதய ஆளுநர் மாகாண அதிகாரத்தை காப்பாற்றுவார் என கூறியிருந்தனர்.

இவ்வாறான நிலையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பிரதமர் செயலாளரை மாற்ற வேண்டாம் என ஆளுநர் கோரியிருப்பது ஏன் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

தற்போதைய வடமாகாண பிரதம செயலாளர் சமன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இருந்தபோது வவுனியாவில் இடம்பெற்ற காணி முறைகேடு தொடர்பில் தற்போதைய ஆளுநர் சாள்ஸ்சின் கணவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட செயலகத்தை முடக்கி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அப்போது வடமாகாண ஆளுநராக சாள்ஸ் இருந்த நிலையில் அதனை சூட்சமமாக கையாண்டு தீர்வு தரலாம் என மக்களை வீடுகளுக்கு அனுப்பியவர் சமன் பந்துள.

இவ்வாறான நிலையில் தற்போது வடமாகாண பிரதம செயலாளராக சமன் உள்ள நிலையில் அவரை மாற்றினால் புதியவர் ஒருவர் ஆளுநர் செயலகத்திற்கு ஏற்றால் போல் செயற்படுவாரா என்ற ஐயம் ஏற்பட்டிருப்பதாவும்,

தனது பதவிக்காலம் முடியும்வரை பிரதம செயலாளராக சமன் இருந்து விட்டால்  பிரச்சினை எழாது என  ஆளுநர் கருதுவதாகவும் அரச அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு