தொழுநோய் தடுப்பு சம்மந்தமான கலந்துரையாடல் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலமையில்...

ஆசிரியர் - Editor I
தொழுநோய் தடுப்பு சம்மந்தமான கலந்துரையாடல் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலமையில்...

வடமாகாணத்தில் தொழுநோய் தடுப்பு சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று வட மாகாண சுகாதார  சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் கடந்த வாரம் இடம்பெற்றது. 

இக்கலந்துரையாடலில் தோல் வைத்திய நிபுணர் டாக்டர் சத்தியரேகா, மாகாண தொற்று நோயியல் நிபுணர், வைத்தியர்கள், 

மாகாண பொதுச் சுகாதார பரிசோதகர், காவேரி கலாமன்ற தலைவர் அருட்தந்தை யோசுவா மற்றும் உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர். 

வடமாகாணத்தில் தொழுநோயின் பாதிப்பு குறைவாகக் காணப்பட்டபோதிலும்  சில பிரதேசங்களில் தொடர்ச்சியாக தொற்றுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

எனவே பொதுமக்கள், தாதியர்கள், வைத்தியர்கள் மத்தியில் இது தொடர்பான  மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், ஆரம்ப  நோய்நிலையை  உடையவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். 

ஆரம்ப நிலையில் சிகிச்சை வழங்த் தாமதித்தால் நோய் நிலை அதிகரித்து பின்னாளில்  அங்கவீனமடையும் வாய்ப்புகள் உள்ளது.  ஆகவே

நீண்ட நாட்களாக மாறாத சொறி (rash) நிலைமை உடையவர்கள் உடனடியாக வைத்தியசாலை சென்று வைத்தியரிடம் ஆலோசனை பெற்று 

மேலதிக ஆலோசனை தேவை ஏற்படும்போது தோல் வைத்திய நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

காவேரி கலாமன்றம் இந்த நோயினை இல்லாமல் செய்ய யாழ்ப்பாணம், மன்னார், மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பல கருமங்களை பல வருடங்களாக செய்து வருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு