SuperTopAds

யாழ்.வலி,வடக்கு மீள்குடியேற்ற நிலமைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்த முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா...

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,வடக்கு மீள்குடியேற்ற நிலமைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்த முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா...

யாழ்.வலி, வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்துள்ளார். 

யாழ்.மாவட்டத்திற்கு 3 நாள் விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள்  ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன 

நேற்று (30) மாலை வலி வடக்கு மீள்குடியேற்ற சங்கங்களை சந்தித்தார். தனது 2015 - 19 ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் வலி, வடக்கின் பெரும்பாலான காணிகளை உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவித்து மக்களுக்கு கையளித்திருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு இதன்போது மக்களால் நேரில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அவரது இப்பணியின்  பயனாகவே பலாலி விமான நிலையம், மயிலிட்டி துறைமுகம், இலங்கை இந்திய விமான, கப்பல் போக்குவரத்துகள் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கான செயற்றிட்டங்கள் சாத்தியமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்னமும் விடுவிக்கப்படாமல் உயர்பாதுகாப்பு வலயமாக காணப்படும் மக்களது காணிகள் தொடர்பாக அவர் இச்சந்திப்பில் கேட்டறிந்தார்.

விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பாக விளக்கங்களை வலி வடக்கு பிரதேச செயலாளர் திரு. சிவஸ்ரீ இக்கலந்துரையாடலில் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து பலாலி, மயிலிட்டி, வசாவிளான் மீள்குடியேற்ற சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அங்கஜன் இராமநாதனின் அழைப்பின்பேரில் யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேனா பல்வேறுபட்ட சமூக மட்ட நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் கலந்து கொண்டுள்ளார்.