யாழ்.புத்தூர் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான 25 பெண்களுக்கு பிணை, 6 ஆண்களுக்கு விளக்கமறியல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.புத்தூர் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான 25 பெண்களுக்கு பிணை, 6 ஆண்களுக்கு விளக்கமறியல்..

யாழ்.புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 31 பேரில் 25 பெண்களை பிணையில் விடுவித்துள்ளதுடன் 6 ஆண்களை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50 இற்கும் மேற்பட்டோர் இருவரையும் தாக்கியதுடன் பெறுமதியான பொருள்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இரண்டு வீடுகளும் முற்றிலும் சேதமடைந்ததுடன் இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பெண்களின் ஒளிப்படங்களை கணினியில் கிராபிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர் என்ற அடிப்படையில் 21 வயது தொடக்கம் 25 வயதான இளைஞர்கள் இருவரின் வீடு மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் 

வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த்தாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தூர் கலை ஒளி கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் படங்களை கணினியில் கிராபிக் செய்து அசிங்கமாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன என்று அச்சுவேலி பொலிஸ் நிலையம் ஊடாக 

சைபர் குற்றப் பிரிவில் மூன்று மாதங்களுக்கு முன்னர் முறையிட்ட நிலையில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமையே குறித்த வன்முறைக்கு காரணம் என தெரியவருகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்த இச்சுவேலி பொலிஸார் 25 பெண்கள் உட்பட 31 பேரை நேற்றைய தினம் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று மல்லாகம் நீதிமன்றுல் முற்படுத்தப்பட்டபோது 25 பெண்களையும் பிணையில் விடுதலை செய்த மன்று மிகுது 6 ஆண்களையும் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு