13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மைத்திரிபால் சிறிசேனா ஆர்வமாக உள்ளார் - அங்கஜன்..

ஆசிரியர் - Editor I
13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மைத்திரிபால் சிறிசேனா ஆர்வமாக உள்ளார் - அங்கஜன்..

13 ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான  மைத்திரிபால சிறிசேனா ஆர்வமாக உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை மாலை கோண்டாவிலில் புதிதாக அமைக்கப்பட்ட மக்கள் நலன்பேணும் அமைப்பின் கட்டடத் தொகுதித் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரை ஆற்றும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அதிக தடவை யாழ்ப்பாணத்திற்கு  விஜயம் செய்த தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உள்ளார்.

நான் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா விஜம் ஒன்றை மேற்கொள்ளுமாறு எங்களுடைய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறுசேனாவிடம் கோரிக்கை எடுத்தபோது எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் வருகிறேன் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுட்கள் என்றார்.

71 வருட பாரம்பரியத்தை கொண்ட எமது கட்சி பல்வேறு பட்ட மாற்றங்களை ஏற்படுத்தி புதிய அரசியல் பரிணாமத்துடன் பயணித்துவரும் கட்சியாகும்.

சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை உரிய வகையில் உள்வாங்கி அவர்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் அபிவிருத்திகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு எமது கட்சியின் தலைவர் தயாராக இருக்கிறார்.

அதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் மக்களின் அபிலாசைகளை விளங்குவதற்காக சகல தரப்பினரையும் சந்தித்து அவர்களின் தேவைகளையும் பிரச்சினையையும் விளங்கி கட்சியை முன்னிலைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

13 ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கடந்த இரண்டு மாதத்திற்கு முன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில்  கோரிக்கைை விடுத்தார்.

அது மட்டும் அல்லாது போர்க்காலத்தில் பாதுகாப்பு பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை மறுபடியும் வழங்குமாறும் கூறினார்.

மேலும் இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டோருக்காக போராடிவரும் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்குவதோடு  சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்.

தெற்கிலுள்ள மக்களைப்போல் வடகிழக்கில் வாழும் மக்களும் சம உரிமைகள் வழங்கப்படுவதோடு சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழ் மக்களின் அவிலாசைகளை வென்றெடுப்பதற்கு  கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனாவின் புதிய அரசியல் பரிணாமத்துடன் தொடர்ந்து பயணிக்கும் என  அங்கஜன் மேலும்  தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு