RTI ஊடான கேள்விக்கு பதிலளிக்க கிராமசேவகரின் வதிவிட உறுதிப்படுத்தல், வாக்காளர் பட்டியல் கேட்ட முட்...ள் கல்விமான்கள் குறித்து மேன்முறையீடு!!

ஆசிரியர் - Editor I
RTI ஊடான கேள்விக்கு பதிலளிக்க கிராமசேவகரின் வதிவிட உறுதிப்படுத்தல், வாக்காளர் பட்டியல் கேட்ட முட்...ள் கல்விமான்கள் குறித்து மேன்முறையீடு!!

யாழ்ப்பாண முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர்  முத்து இராதாகிருஷ்ணனும் கொக்குவில் இந்து கல்லூரி அதிபரும் தகவல் அறியும் உரிமையை மீறியமை மற்றும் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் முறைப்பாட்டாளர் இலங்கை தகவல் அறியும் உரிமை  ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலமாக முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்ததாவது 14 பெப்ரவரி 2023 அன்று, நிதி மோசடி மற்றும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்காக யாழ்.வலயக் கல்வி அலுவலகத்திற்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கோரிக்கையை சமர்ப்பித்தேன்.

துரதிர்ஷ்டவசமாக, எனது தகவல் கோரிக்கைக்கான பதிலைப் பெற ஐந்து மாதங்கள் நீடித்த நிலையில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் எண் 12 2016 இன் கீழ் தகவல் சேகரிப்பைத் தொடர விரும்பினால் சில ஆவணங்களை வழங்குமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டது.

எனது வதிவிட முகவரியை உறுதிப்படுத்த கிராம சேவகரின் உறுதிப்படுத்தல் சான்றிதழ், வாக்காளர் பட்டியல் தருமாறு கோரும் கடிதம் யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளரின் கையெழுத்துடன் வழங்கப்பட்டது.

சட்டத்தை முழுமையாக மதிப்பாய்வு செய்ததில், மேற்கூறிய தேவைகளுக்கான எந்த விதிகளையும் குறிப்புகளையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

யாழ்.வலயக் கல்வித் திணைக்களம் மற்றும் வடமாகாணக் கல்வித் திணைக்களம்போன்ற பாடசாலைகளுடன் தொடர்புடைய மேற்பார்வை அமைப்புகளிடம் 

இந்தத் தேவைகள் தொடர்பான விளக்கத்தைப் பெற முயற்சித்த நிலையிலும் மேற்குறித்த  நிறுவனங்களிடமிருந்து எனக்கு எந்த பதிலும் இன்னும் பெறவில்லை.

எனக்கு வழங்கப்பட்ட கோரிக்கைகள் வேண்டுமென்றே தகவல்களை மறைக்க உருவாக்கப்பட்டவை என்பது தெளிவாகத் தெரிகின்ற நிலையில் இலங்கை அரசியல் அமைப்பை மீறிய அதிகாரிகள் மீது 

நடவடிக்கை எடுப்பதோடு வடமாகாணத்தில், குறிப்பாக கல்வித் துறையில் சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு