யாழ்ப்பாணத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மாவின் சமுதாயப்பணி பக்தி நெறி ஆன்மீக மாநாடு...
யாழ்.மண்ணில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மாவின் சமுதாயப்பணி பக்தி நெறி ஆன்மீக மாநாடு நாளை 29 ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த மாநாடு தொடர்பான ஊடக சந்திப்பு நேற்றுமுன்தினம் யாழ்.ஊடாக அமையத்தில் இடம்பெற்றது.
காலை 8 மணிக்கு நல்லூர் ஆலயம் மூன்றலில் இருந்து கலை கலாச்சார பவணிகளுடன் வீரசிங்கம் மண்டபத்துக்கு பவனியாக சென்று விழா ஆரம்பமாகும்.
கலை நிகழ்வுகளாக இராமநாதன் நுண்கலை பீடம் மாணவர்களின் கலை கலாச்சார நாட்டிய நிகழ்வுகள் வீணை வயலின் மிருதங்க இசை நிகழ்வுகள்,
ராகம் இசை குழுவின் இசை கானம் மற்றும் செந்தமிழ் வில்லிசை குழுவின் வில்லிசைக் கச்சேரியும் இடம்பெறவுள்ளது.
எமது மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவதையிட்டு மகிழ்ச்சி அடைவதோடு அன்றைய தினம் 2 வீடுகள் பயனாளிகளுக்காக கையளிக்கப்பட உள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனின் அருளாசியினால் கல்வி, மருத்துவம், சுய பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக 1996 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டில் ஆதிபராசக்தி மன்றம் உருவாக்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு விழாதீபம் புதுகுடியிருப்பில் ஆதிபராசக்தி அறிவகத்தை ஆரம்பித்தோம்.
யுத்த காலத்தில் கூட ஆதிபராசக்தி அறிவகம் சிதைவடையாமல் இன்றும் கம்பீரமாக அதன் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
இதுவரை 54 வீட்டு திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கியுள்ள நிலையில் எமது மாநாடு அன்று இரண்டு வீடுகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளோம்.
ஆகவே யாழில் இடம்பெறும் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மாவின் மாநாட்டில் கலந்து கொண்டு அம்மாவின் அருள் ஆசிகளை பெறுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.