மக்களின் கருத்து சுதந்திரத்தை அடக்கவே ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டம்..!

ஆசிரியர் - Editor I
மக்களின் கருத்து சுதந்திரத்தை அடக்கவே ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டம்..!

நாட்டு மக்களின் கருத்து சுதந்திரத்தை அடக்கவே ஊடக ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக தேசிய சமாதான பேரவையின் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சமாதானத்துக்கான அமைதி ஊர்வலத்தில் கலந்துகொண்டபின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில்  புதிதாக  இரண்டு சட்டங்கள் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதச் சட்டத்தை நீக்கி அதை விட ஆபத்தான புதிய பயங்கரவாத எதிர்ப்புச்  சட்டத்தை கொண்டு வருவதற்கான சட்டமூலம் தயார் செய்யப்பட்டு விட்டது.

அதேபோன்று மக்களின் அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் பாதிக்கும் ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் குறித்த இரு சட்டமூலங்கள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியபோதும் இலங்கை அரசாங்கம் அதனை செய்வதாகத் தெரியவில்லை.

ஒரு ஜனநாயக நாட்டில் வாழுகின்ற மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை இல்லாமல் ஒழிப்பதற்காக அதனை ஒளிபரப்பும் ஊடகங்களை குறிவைத்து  குறித்த சட்டத்தினால் அரசாங்கம் தடுக்க எண்ணுகிறது.

அரசாங்கத்தின் ஊழல் நிர்வாக முறைகேடு என்பவற்றை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தும்போது ஊடகங்களின் அனுமதி பத்திரங்கள் இரத்தாகும் வாய்ப்பும் அல்லது தடை செய்வதற்கான சூழல் உருவாகும் .

என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு