SuperTopAds

மத நல்லிணக்கத்திற்கான நடைபவனி யாழ்ப்பாணத்தில்...

ஆசிரியர் - Editor I
மத நல்லிணக்கத்திற்கான நடைபவனி யாழ்ப்பாணத்தில்...

யாழ்.மாவட்ட சர்வமதக் செயற்குழுவினால் மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனியொன்று முன்னெடுக்கப்பட்டது.

அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பின் (SOND)  நிறுவன ஏற்பாட்டில் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் 

இன்று காலை 8 மணியளவில் யாழ்.பொது நூலகத்தில் ஆரம்பித்து வைத்தியசாலை முன் வீதியூடாக நடைபவனி மீண்டும் நூலகத்தை வந்தடைந்தது.

இதன்போது தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகான் பெரேரா, வவுனியா பல்கலைக்கழக வேந்தர் மோகனதாஸ், 

அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ச.செந்தூராசா மற்றும் நான்கு மதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி மதகுருமார் 

பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.