SuperTopAds

மக்களுக்காக பேசினால் கைது செய்வதா.. பியூஸ் மனுஷ் சகோதரி ஆவேசம்.!

ஆசிரியர் - Editor II
மக்களுக்காக பேசினால் கைது செய்வதா.. பியூஸ் மனுஷ் சகோதரி ஆவேசம்.!

சேலம் - சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் எட்டு வழி பசுமை சாலை 277 கிமீ தொலைவுக்கு அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தங்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக திகழ்கிற விளைநிலங்களை பசுமை வழி சாலைகளுக்காக அரசு கையகப்படுத்துவதை அப்பகுதி மக்கள் துளியும் விரும்பவில்லை. தங்கள் வாழ்வாதாரத்தினை சீர்குலைக்கும் முயற்சியகாகவே இதனை அவர்கள் பார்க்கின்றனர்.

அதே சமயம், சாலைகள் அமைப்பதற்காக பொதுமக்களின் வீடுகள் மற்றும் விளைநிலங்களை கையகப்படுத்த அளவெடுத்து வருகிறது அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களும், பொதுமக்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கின்ற சமூக ஆர்வலர்களும், செயற்பாட்டாளர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

தொடர்ச்சியாக மக்களுக்காக குரலெழுப்பி வரும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பியூஷின் சகோதரி, "வளர்ச்சிகளை வேண்டாமென்று மறுப்பவர்கள் அல்ல நாங்கள். ஆனால், ஏழைகளின் வாழ்வினை சிதைத்து இப்படியான வளர்ச்சிகள் தேவையா என்றே கேட்கிறோம். அதற்காக அரசை நோக்கி குரலெழுப்புபவர்களை எல்லாம் ஒடுக்குவது என்ன நியாயம்" என கேள்வியெழுப்புகிறார்.