பொங்கலுக்கு முன் மேலும் பலர் விடுதலை!

ஆசிரியர் - Admin
பொங்கலுக்கு முன் மேலும் பலர் விடுதலை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் பல கைதிகளை விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தமக்கு அறிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.     

கடந்த 30 ஆம் திகதி அமைச்சரை யாழ்ப்பாணத்தில் சந்தித்ததாகவும், சந்திப்பின் போது, அடுத்த ஆண்டு தைப் பொங்கலுக்குள் மேலும் பல பயங்கரவாதத் தடைச் சட்டக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

“மற்ற அனைவரையும் விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.கைதிகளை விடுவிப்பதில் ஆர்வமாக உள்ளதாகவும், ஆனால் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேசி வருவதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு