வடக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரிப்புக்கு அரசே காரணம்!
இலங்கை அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகளால் தான் வடக்கில் போதைப்பொருள் விநியோகம் அதிகமாக உள்ளது இதனை அரசாங்கம் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வடக்கு அதிகரித்து வருகின்ற போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக கேட்டபோது அவர் இதனை தெரிவித்தார்.
வடக்கில் போதப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது இது இளைஞர்களை இலக்கு வைத்து அவர்கள் எண்ணங்கள் சிந்தனைகளை திசைதிருப்புவதற்காக இந்த வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுகிறது . அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகளால் இவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது இதனை நாங்கள் உறுதியாகவே தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் காலத்திலேயே குறிப்பாக வன்னி கட்டுபாட்டில் இருந்த போது யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் புழக்கத்தில் இருந்துள்ளது பாதை பூட்டப்பட்டிருந்த போது கப்பல் வழியாகவும் கொண்டு வந்து புழக்கத்தில் விட்டிருந்தார்கள் தற்போதைய சூழலில் கஞ்சா போதை பொருள் புழக்கத்தில் அதிகமாக இருந்த்து தற்போது அதற்கு அதிகமாக ஹீரோயின் அதிகமாக புழக்கத்துக்கு வரத்தொடங்கியுள்ளது.
இலங்கையின் பல பாகத்திலும் போதை பயன்பாடு உள்ள நிலையில் நிலையில் வடக்கில் அதிகமான விநியோகங்களும் அதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் இழவயதினரிடையே அதிகரித்து செல்கின்றது.
இளைஞர் யூவதிகளை திசை திருப்புவதற்காகவே இந்த செயற்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு. எங்கள் செல்வங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இவர்களுக்கு என்று பொறுப்பை தட்டிக்கழிக்காது அனைவருமே ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும்.
அரசியல்வாதிகள், மதங்கள், பொது அமைப்புகள், கிராமிய அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என அனைத்துதூறை சார்ந்தவர்களும் இதனை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் விழிப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் அச்சுவேலியில் சிறுவர் சீர்திருத்தப் பாடசாலை உள்ளது அதற்கருகாமையிலும் காணிகளும் காணப்படுகின்றது அங்கு மறுவாழ்வு நிலையம் ஒன்றினை அமைத்து இதில் பாதிக்கப்பட்டவர்களை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
தென்பகுதிக்கு பாதிக்கப்பட்டவர்களை கொண்டு செல்வதை தவிர்த்து அந்தந்த மாவட்டங்களிலேயே மறுவாழ்வு இல்லங்கள் அமைத்து அதற்கான சிகிச்சை முறைகளை பின்பற்றுவதே சிறந்த தீர்வாகும் அவர்கள் தென்பகுதிக்கு கொண்டு சென்றால் அவர்கள் மேலும் அதில் விற்பனையளர்களாக வரக்குடிய நிலைதான் ஏற்படக்கூடியதாக இருக்கும்.
போதை பொருள் பயன்பாட்டை தடுத்து நிறுத்த துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசாங்கமும் நீதித்துறை கூடிய கவனம் எடுத்து இதை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை தூரிதபடுதவேண்டும் என்றார்.