இன்றைய நாள் எப்படி 23/05/2018
இன்று!
விளம்பி வருடம், வைகாசி மாதம் 9ம் தேதி, ரம்ஜான் 7ம் தேதி,
23.5.18 புதன்கிழமை, வளர்பிறை, நவமி திதி இரவு 10:26 வரை;
அதன் பின் தசமி திதி, பூரம் நட்சத்திரம் இரவு 10:57 வரை;
அதன் பின் உத்திரம் நட்சத்திரம், அமிர்த யோகம்.
* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அவிட்டம்,சதயம்
பொது : ஆண்டாள் வழிபாடு.
மேஷம்: இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். பெண்கள் விருந்து விழாவில் பங்கேற்று மகிழ்வர்.
ரிஷபம்: உங்களின் எதார்த்த பேச்சு பிறரை சங்கடப்படுத்தலாம். தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவுக்கு திண்டாட நேரிடலாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்வது நல்லது.
மிதுனம்: குடும்பத்தினரிடம் விவாதம் செய்ய வேண்டாம். திட்டமிட்ட பணிகளைத் தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது.தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வீடு, வாகன வகையில் மராமத்துச் செலவு உண்டாகும்.
கடகம்: நண்பர்களால் உதவி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். அரசியல்வாதிகள் திடீர் பயணம் மேற்கொள்வர்.
சிம்மம்: நல்லவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடும்.
கன்னி: வீண் பேச்சை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தடை குறுக்கிடலாம். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடலாம். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.நண்பரால் உதவி உண்டு.
துலாம்: தகுதிக்கு மீறி வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். விஷப் பிராணிகளிடம் விலகுவது நல்லது. பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.
விருச்சிகம்: மனதில் நல்லெண்ணம் அதிகரிக்கும். உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்ததில் வருமானம் திருப்தி அளிக்கும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு நடக்கும்.
தனுசு: குடும்ப சிரமத்தைப் பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வருமானம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். பெண்களுக்கு சகோதர வழியில் உதவி கிடைக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.
மகரம்: மனச்சாட்சிக்கு முக்கியத்துவம் தருவீர்கள். திட்டமிட்ட பணி ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் லாபம் உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். மனைவியின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.
கும்பம்: காலத்தின் அருமை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். நிலுவைப் பணம் விடாமுயற்சியால் வசூலாகும். உடல்நலனில் அக்கறை தேவை. பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர்.
மீனம்: மனதில் இருந்த தயக்கம் விலகும். அன்றாடப் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.